கருத்துப் பேழைப் பகுதியில் வெளியான ‘துப்புரவுத் தொழிலாளர்கள் குரல் கேட்கிறதா?’ கட்டுரை, அடிமட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையைக் காட்டுகிறது. நமது சாலைகளையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதையே பணியாகக் கொண்டிருக்கும் அத்தொழிலாளர் களுக்கு உரிய சம்பளம் அளிக்கப் பட வேண்டியது அவசியம். சாலை யில் குப்பைகள் கிடந்தால், அதை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று நாம் கேட்கிறோம்? ஆனால், அந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றனவா என்று கவலைப்படுவதில்லை. இதுபோன்ற கட்டுரைகள், கடுமையான உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விடிவைத் தேடித் தந்தால் மகிழ்ச்சியே!
எம். ராமநாதன், திருச்சி.