நடுப்பக்கத்துல மாத்தம் மாத்தம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே எதையும் காணேமேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிறப்ப… நேத்து காத்தால வந்த ‘தி இந்து’ நடுப் பக்கத்தைப் பாத்தா ‘அப்புறம் என்னாச்சுன்னா…’ன்னு ஆரம்பிச்சி ஒரு கட்டுரை. படிச்ச பின்னாடிதான் புரிஞ்சது, சொன்ன மாதிரியே மாத்தம் வந்துருச்சுன்னு சொல்ல வச்சுப்புட்டாப்ல மகேசு. அதுவும் கிரானைட் குவாரியப் பத்தி புரியிற மாதிரி, தெளிவா நம்ம பாஷையில எழுதி அசத்திப்புட்டாப்பல!
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.