நம்முடைய கர்ணபரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்!” எனும் கட்டுரையை இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும், அவசியம் படிக்க வேண்டும். பெரியவர்கள் அனை வருமே கருவூலங்கள் என்பதையும், அவர்களின் வாழ்க்கை முறையை யும், கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இக்கட்டுரை உணர்த்தியது. இன்றைய காலகட் டத்துக்கு மிகவும் அவசியமான பதிவு இது. இளைய தலைமுறையைத் தங்கள் தாத்தாக்களிடமும், பாட்டிகளிடமும் இந்தக் கட்டுரை நிச்சயம் பேசவைக் கும். அத்துடன், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் முடக்கிவைக்கும் மகன் களிடமும் இந்தக் கட்டுரை மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புவோம்.
- ம.மீனாட்சிசுந்தரம், சென்னை.