இப்படிக்கு இவர்கள்

அசையாமல் அசைக்கிறான் அய்லான்

செய்திப்பிரிவு

ஆசை எழுதிய ‘ஒற்றைக் கால் மைனாவும், கரையொதுங்கிய குழந்தையும்’ எனும் கட்டுரைக் கவிதையை வாசிப்பவர்கள் பலரும் தங்களது சமன் நிலையை இழக்கக் கூடும்.

தன்னை யாரோ பார்த்துவிட்டார்கள் என்றோ, தனது மனத்தில் உள்ளதை வாசித்துவிட்டனர் என்றோ, தங்களது பெருமூச்சை அம்பலப்படுத்திவிட்டார் என்றோ உணரவும் கூடும்.

சமூக நிகழ்வுகளில் எது சிறியது, எது பெரியது? “... மாபெரும் அபாயத்தின் செய்தியைச் சுமந்துவந்து, உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டு உயிர்துறந்த தூதுவனைப் போல் இறந்துகிடக்கிறான் அய்லான்....” என்று எழுதுமிடத்தில் எரியும் மெழுகுச்சுடர் ஒன்று குடைசாய்ந்து உள்ளத்தை உறுத்தி வருத்தி எடுத்துவிடவில்லையா!

ஆனாலும், சம காலம் அப்படியா நகர்கிறது? பதறவைக்கும் விஷயங்களை எல்லாம் கேட்டுவிட்டு, “சரி, அப்புறம்?” என்று மனம் லயிக்காது கேட்பதைவிடவும் வன்முறை ஒன்று உண்டா? அசைவற்றுப்போன நிலையிலும் ஒரு கண்டத்தையே அசைத்துக்கொண்டிருக்கிறான் அய்லான்.

- எஸ். வி. வேணுகோபாலன், சென்னை.

SCROLL FOR NEXT