இப்படிக்கு இவர்கள்

உண்மையான ஆய்வுக்கூடம்

செய்திப்பிரிவு

வெற்றிக்கொடியில், ‘ஆய்வுக்கூடக் கோமாளிகள்’ என்ற கட்டுரை படித்தேன். உண்மையான எழுத்துக்கு என்றும் எப்போதும் மதிப்பு உண்டு என்பதை ஆயிஷா நடராஜன் எழுத்துக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பள்ளிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களின் தன்மையையும் அது இயங்கும் விதத்தையும் இதைவிட அப்பட்டமாக யாரும் தெரிவிக்க முடியாது. சாதாரண மீனவ மாணவர்கள், சுனாமிக்குப் பின் கடலின் மாற்றத்தை அவர்களுக்கே உரிய பாணியில் பள்ளியின் ஆய்வுக்கூடத்தில்

நடத்திக் காட்டியதோடு மட்டுமல்லாமல், உண்மையான ஆய்வுக்கூடம் எது என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார். இவரது பள்ளி ஆய்வகக் கோமாளிகள், பள்ளியில் பெற்ற வெற்றியை வாழ்க்கையிலும் அவர்கள் பெற்றுள்ளனர் என்று சொல்லி முடித்துள்ள விதம் அருமை.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

SCROLL FOR NEXT