மது ஒழிப்புப் போராளி சசிபெரு மாளின் மரணம் சாதாரணமான தல்ல; அது மதிக்கப்பட வேண்டியது. தாமதிக்காமல் துரித நடவடிக்கை எடுத்து மது ஒழிப்பை உறுதி செய்ய வேண்டும். ‘‘பள்ளிக் குழந்தைகள் இலவசமாகப் படிக்க அரசிடம் பணம் இல்லை’’ என்று அதிகாரிகள் கூறியபோது, “என் நாட்டுக் குழந்தைகள் படிக்க வீதியில் இறங்கிப் பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்ற காமராஜரை இந்தத் தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
- கி. நாவுக்கரசன், ராணிப்பேட்டை.