பூரண மனநலமும் தெளிவான சிந்தனையும் இருந்தும்கூட, பொது இடத்தில் சுத்தம் சுகாதாரம் குறித்துக் கடுகளவும் அக்கறையில்லாமல் இருக்கிறோம்.
அப்படியிருக்க, வத்தலகுண்டு பேருந்து நிலையத் தூய்மைக்குத் தன்னை அறியாமலே பாடுபட்டுக் கொண்டிருக்கும், கொடைக்கானல் ரெங்கராஜனின் செயல் நெகிழ்வூட்டுகிறது. தன்னலமற்ற அவரது சேவையைப் பாராட்டும்விதமாக மனநல நிபுணரிடம் அவரைக் கூட்டிச்சென்று, தக்க சிகிச்சை அளித்துக் குணமடையச் செய்வதே இந்த ஊதியமில்லா ஊழியருக்கு வத்தலகுண்டு பேரூராட்சி செய்யக்கூடிய உபகாரமாக இருக்கும்.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.
***
சட்டம் போட்டாலும் திருந்தாத மக்கள், ஒரு மனநோயாளியின் நடவடிக்கை மூலம் திருந்தியுள்ள நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது. இவருடைய மனநோயைக் குணப்படுத்த யாரும் முயற்சி செய்யா விட்டாலும், அவரால் அந்தப் பகுதி மக்கள் மன மாற்றம் அடைந்துள்ளது ஒரு நல்ல செய்திதான். அவர் நமக்கு வாழும் உதாரணமாக இருந்து கற்றுக்கொடுக்கிறார்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.