நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து பாலியல் படங்களைப் பார்ப்பதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது, இது தனிமனிதச் சுதந்திரம்தானே... இதில் தலையிட அரசுக்கே உரிமையில்லை என்று வாதிடுவது மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத் தோன்றலாம்.
ஆனால், இத்தகைய பாலியல் படங்களை எடுப்பதற்காக குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அந்தப் படங்களில் நடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
உடன் படவில்லையெனில், அவர் களுக்கு எதிராகப் பல வகைகளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுகின்றன. மேலும், கணவன் - மனைவிக்குள் நிகழும் அந்தரங் கத்தைத் திருட்டுத்தனமாகப் படம்பிடித்து அவர்களின் வாழ்வைச் சிதைக்கின்றார்கள். இத்தனை குற்றச் செயல்களுக்குப் பிறகுதான் ‘அந்த’ப் படங்கள் எடுக்கப்படுகின்றன.
அந்த படங்களைப் பார்க்கும் ஒருவரின் மனநிலையில் ஏற்படும் பாலியல் சார்ந்த மாற்றம் அத்தோடு முடிந்து விடப்போவதில்லை. அது நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே பாலியல் வன்புணர்வாக வெளிப்படவும் வாய்ப்பு உண்டு. ஆக, பாலியல் படங்கள் தனிமனித ஒழுங்கீனத்தைத் தாண்டி சமூகப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எனவே, தனிமனிதச் சுதந்திரம் என்ற பெயரில் பாலியல் படங்களை அனுமதிப்பது நல்லதல்ல.
- யாசீன்,திண்டுக்கல்.