கொலைகாரன்பேட்டைக்கான காரணம் வேறு. நான் ராயப் பேட்டையில் 20 வருடம் இருந்தவன்.
கொல்லத்துக்காரன்பேட்டை என்பதே முதல் பெயர் என்பது பழைய பேட்டைவாசிகள் கருத்து. கட்டிட வேலை செய்யும் கொத்தனார் களுக்குக் கொல்லத்துக்காரர் என்பது வழக்குப் பெயர். கொலுரு என்பது அவர்கள் பயன்படுத்தும் கருவி.
சிமெண்ட், மணல் கலவையை எடுத்துப் பூச உதவுவது கொலுரு. கொலுரு பிடிப்பவன் கொல்லத்துக் காரன். அது கொலைகாரனாக மருவியது.
- ஞாநி, சென்னை.