இலவசங்களைக் குறைப்பது பற்றிய டி.எல்.சஞ்சீவிகுமாரின் கட்டுரை சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டிய ஒன்று. பொதுவாக, அரசிடமிருந்து எது பெற வேண்டுமென்றாலும் எழுத்துபூர்வ விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
அது முறைப்படி ஆயப்பட்டு, உண்மையாகத் தேவைப்படுவோர்க்கு வழங்கப்பெற ஆணை பிறப்பிக்கப்படும். இன்றைய இலவசங்கள் தேவையறிந்து கொடுக்கப்படுபவை அல்ல. தேவைப்படாதவர்க்கும் அள்ளி வீசப்படுகின்ற இலவசங்கள் மக்களைப் பேராசை மிக்கவர்களாக ஆக்கிவிட்டது.
வெள்ள நிவாரணம், இலவச டி.வி. போன்றவற்றைப் பெற காரில் வந்தவர்களையும் கண்டுள்ளேன். செல்வந்தர்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் சைக்கிள் கள் வழங்க… உடனே அதனைப் பாதி விலைக்கு விற்ற மாணவரையும் நான் கண்டுள்ளேன்.
சைக்கிள் ஓட்ட முடியாதவர்க்கும் சைக்கிள், ஏற்கெனவே கிரைண்டர், மிக்சி இன்னோரன்ன பொருட்கள் உள்ளவர்க்கும் இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கல்வி, மருத்துவம் போன்ற எது இலவசமாகக் கொடுக்க வேண்டுமோ அவை கிடைக்க உறுதி செய்ய முடியவில்லை. அதில் கவனம் செலுத்தலாம்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.