இப்படிக்கு இவர்கள்

கோலக்காரன்பேட்டை

செய்திப்பிரிவு

நான் ஒரு எழுத்தாளர். சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ‘திண்ணைத் தோழர்கள் பதிப்பகம்’ என்றொரு நூல் வெளியீட்டு நிறுவனத்தை சென்னையில் தொடங்கினோம். அதன் அலுவலகம் கொலைகாரன்பேட்டையில் இருந்தது. இப்பகுதியின் உண்மையான பெயர் என்ன என்பதை அறிய பெருமுயற்சி எடுத்துக்கொண்டோம்.

அதன் விளைவாக… அந்தப் பகுதியில் முன்பு கோலம் விற்கும் ஒரு சாதியினர் வசித்துவந்தனர் என்றும், அவர்களைக் குறிக்கும் வகையில் அப்பகுதி கோலக்காரன்பேட்டை என வழங்கப்பட்டது என்றும், நாளடைவில் கொலைகாரன்பேட்டையாக மாறிவிட்டது என்றும் அறிந்தோம். நாங்கள் கண்ட இவ்வுண்மையைப் பகிர்ந்துகொண்டபோது, தமிழ் ஆர்வலர்கள் பலரும் வியப்படைந்தனர். எங்கள் சில பதிப்புகளிலும் கோலக்காரன்பேட்டை என்றே குறிப்பிட்டோம்.

- சையத் அப்துர் ரஹ்மான் உமரி, குனியமுத்தூர்.

SCROLL FOR NEXT