என் காலைச் சிற்றுண்டியைக்கூடத் தவறவிட்டிருக்கிறேன். ஆனால், ஒருமுறைகூட சிறந்த கட்டுரைகளை வாசிக்கத் தவறியதில்லை.
அப்படியான கட்டுரைகளில் ஒன்றாக இடம்பிடிக்கிறது ‘தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி!’ தாமிரபரணி நதிக்கரை ஊரான அம்பாசமுத்திரத்தில் பிறந்தவன் நான் என்பதால், உங்கள் கட்டுரைகள் என்னை என் இளம்பிராயத்துக்கே கொண்டுசெல்கின்றன.
நினைவலைகளை மட்டும் மீட்டாமல் அறிவியல் அடிப்படையில் யதார்த்த உண்மைகளையும் அவை முன்னிறுத்துகின்றன. பண்டைய தமிழகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்கிய ஆற்றினை நாம் எப்படிப் பாழ்படுத்துகிறோம் என்பது கண்கூடாகப் புரியவைத்த கட்டுரைகள் அவை.
- டி. வடமலையப்பன்,மதுரை.