'சென்னை ஏன் புழுங்குகிறது?' கட்டுரை மிக அருமை. சென்னையின் சீரழிவுக்கு சென்னைவாசிகளின் பாராமுகமும் அக்கறையின்மையுமே காரணமே தவிர, ஊரைக் குறை சொல்ல வேண்டாம் என்று பொட்டில் அறைந்தார்போல் சொல்லியிருக்கிறார். எவ்வளவு உண்மை! வெளியூரிலிருந்து பள்ளிப் படிப்புக்காக சென்னை வந்த நான், வெகுநாட்களாக கூவம் என்பது ஒரு நதியின் பெயர் என்று அறியாமலேயே இருந்துவிட்டேன். சாக்கடை என்பதைத்தான் சென்னை பாஷையில் கூவம் என்றழைக்கின்றனர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகொரு நாள் கூவத்தில் படகுப் போக்குவரத்து, மீன் பிடித்தது பற்றியெல்லாம் படித்தது ஆச்சரியத்தையும் எப்படியிருந்த நதியை இப்படி ஆக்கிவிட்டோமே என்ற வேதனையையும் தந்தது.
- கிருத்திகா, திருச்சி.