எதிர்க் கட்சிகளின் கடும் அமளியில் எந்தப் பணியும் நடைபெறாமல் நாடாளுமன்றம் நான்கு வாரமாக முடங்கியிருந்தது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாக உள்ளது.
ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும்போதும் ஏதாவதொரு ஊழல் புதிது புதிதாய் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது, இன்னும் பல புதிய ஊழல்கள் உருவெடுக்கின்றன.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் நிறைவேறுமா என்று மக்கள் எதிர்பார்த்திருக்கும்போது, நாடாளுமன்றத் தில் இவர்கள் செய்த ஊழலை விமர்சனம் செய்து, காலத்தை விரயம் செய்வது மட்டுமல்ல மக்களையும் முட்டாளாக்குகிறார்கள்.
இது போன்ற நிகழ்வுகளால் நமது ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பகத்தன்மை குறையக்கூடிய சூழ்நிலைதான் உருவாகும்.
- நன்னிலம் இளங்கோவன்,மயிலாடுதுறை.