இப்படிக்கு இவர்கள்

குழப்பம் எங்கே வந்தது?

செய்திப்பிரிவு

69-வது சுதந்திர தினமா அல்லது 68-வது சுதந்திர தினமா என்னும் குழப்பம் பற்றி வாசகர் கடிதம் பார்த்தேன். பொதுப் புத்தியில் குழப்பம் இருப்பது உண்மைதான்.

ஆனால், அந்தக் குழப்பத்தை மேற்படிக் கடிதமும் தெளிவாகத் தீர்த்துவைக்கவில்லை. 1947-ல் சுதந்திரம் கிடைத்த தினம் என்பது முதலாவது சுதந்திர தினம். சுதந்திரத்தை முதன் முதலாகப் பெற்ற தினம். அடுத்த ஆண்டை முதலாண்டு நிறைவு. இரண்டாமாண்டுத் தொடக்கம் என இரண்டு விதமாகச் சொல்லலாம்.

அதாவது, சுதந்திரத்துக்கு ஒரு வயது நிறையும்போது, இரண்டாம் ஆண்டு தொடங்கிவிடும். 1997-ல் 50 ஆண்டுகள் நிறையும்போது 51-வது ஆண்டு தொடங்கும். இதை 50 ஆண்டு நிறைவு / 50 வயது என்று சொல்லலாம். அல்லது 51-ம் சுதந்திர தினம் எனலாம். இதே விஷயம் பிறந்த நாளுக்கும் நூற்றாண்டுக்கும் பொருந்தும். பாரதியார் 1882, டிசம்பர் 11-ல் பிறந்தார். 1982-ல் அவருக்கு நூறு ஆண்டுகள் நிறைவு.

ஆனால் 99-ம் ஆண்டு முடியும்போதே 100-ம் ஆண்டு தொடங்கிவிடுவதால், 1981-லேயே நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் "தொடங்கி 1982-ல் நிறைவுபெறும். வயது என்பது நிறைந்த நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகளைப் பொறுத்தது. 68 நிறைவடையும் அதே நாளில் 69 தொடங்கும். எனவே, இந்திய சுதந்திரத்துக்கு 68 வயது என்பதும் சரி, 69-ம் சுதந்திர தினம் என்பதும் சரி.

- தாமரை,சென்னை.

SCROLL FOR NEXT