இன்றைய மாணவர்களுக்குப் புத்தகச் சுமையும் அதிகம், வீட்டுச் சுமையும் அதிகம். வீட்டு வேலை, வீட்டுப்பாடம், டியூஷன் என்று பள்ளி செல்லும் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேலை தேடும் இளைஞர்களின் வலியைவிடவும், பாரம் தூக்கும் தொழி லாளியின் வேதனையைவிடவும் மிகுதியானவை என்பதைத் ‘தூங்கவிடுங்கள்’ கட்டுரை சிறப்பாக எடுத்துரைத்தது.
ஆசிரியரின் அச்சுறுத்தல், பெற்றோர் கண்டிப்பு இப்படி மன உளைச்சலோடு மாணவர்கள் படும்பாடு பரிதாபம்.
உடலும், மனமும் புத்துணர்வுடன் இருந்தால்தான் அடுத்தவர் சொல் வது நம் மனதில் பதியும். ஆகையால், அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்காமல், நேரத்தோடு பிள்ளைகளைப் பெற்றோர் தூங்கவைத்தல் நல்லது. அப்படிச் செய்தால் அதிகாலை உற்சாகமாக விழிக்க முடியும். காலை எழுந்தவுடன் பதற்றம் அடையாமல் அனைவரும் உடற்பயிற்சி செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்!
- பொன்நடேசன், சின்ன அய்யம்பாளையம்.