இப்படிக்கு இவர்கள்

பெண்ணினத்துக்குப் பெருமை

செய்திப்பிரிவு

தமிழக அரசிடமிருந்து, கல்பனா சாவ்லா, விருது பெற்று, பெண் இனத்துக்கே பெருமை தேடித்தந்த, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணி, குடும்பத் தலை விகளில் மிகவும் வித்தியாசமானவர் மட்டுமல்ல, துணிச்சல் மிக்கவரும்கூட! இன்றைய காலகட்டத்தில், குடும்பப் பொருளாதாரத்துக்காக, கணவன் செய்யும் தொழிலில் தாங்களும் முடிந்தவரை பங்குகொண்டு, தங்கள் பங்களிப்பையும் உழைப்பையும் தருகிறார்கள் என்பதற்கு குடும்பத் தலைவி ஜோதிமணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண்ணினம் பெருமைப்பட வேண்டிய தருணமிது!

- பி. நடராஜன், மேட்டூர் அணை.

SCROLL FOR NEXT