இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: பள்ளியில் புதிய தொடக்கத்தைச் 

செய்திப்பிரிவு

சாத்தியப்படுத்திய ‘இந்து தமிழ்’ தீபாவளியையொட்டிய பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையில், மாணவர்கள் வழக்கமான பாடம் என்றால் முகம் சுளிப்பர். ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை உடுக்கை இழந்தவர் கைபோல உடனே உதவியது.

ஆம், ‘அடுத்த பெரும் உலக சாதனை:

கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்’ கட்டுரை நான் சென்ற அனைத்து வகுப்புகளிலும் வாசிக்கப்பட்டது. வாசிப்பின் தொடர்ச்சியாக, மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இனி, வாரத்தில் ஒரு பாடவேளை பாடப்புத்தகத்தில் இல்லாத விஷயங்களைப் படிக்க உறுதியேற்றனர். புதிய விடியலை நோக்கி நகர்த்திய ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றி!

- என்.இராஜப்பா, கணினி ஆசிரியர், தேசிய மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி.

கூர்மையான விஷயங்களை முன்வைக்கும்

‘பெண் பார்வை’ தொடர் நவீனா எழுதிய ‘மலர்ப் பெண்கள்’ குறுங்கட்டுரை வாசித்தேன். உள்ளத்தில் உள்ளபடி கூறுவது என்றால், அந்தக் கட்டுரை என் மனதை ஈட்டி கொண்டு குத்துவதுபோல இருந்தது. சென்ற வாரம் ஒரு ஜவுளிக் கடைக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். வாசலில் நான்கு பெண்கள் வரவேற்றனர்.

ஒருவேளை இந்தக் கட்டுரையை முன்பு படித்திருந்தால் அந்த நால்வரையும் அவ்வளவு எளிதாகக் கடந்துசென்றிருக்க முடியாது. ‘பெண் பார்வை’ எனும் இந்தத் தொடரில் குறைவான இடத்தில் கூர்மையான விஷயங்களை முன்வைக்கிறார் நவீனா. அவர் முன்வைக்கும் பார்வை அதுவரை பார்த்துவந்த விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்க்க உதவுகிறது.

- சி.இரமேசு, விசுவநாதபுரம்.

SCROLL FOR NEXT