ஹாரியட் பீச்சர் எழுதிய டாம் மாமாவின் கதை (Uncle Toms Cabin) நவீன காலத்தில் நிலவிய அடிமைத்தனம்பற்றிய ஒரு வலுவான பதிவு. உடலுறுதி, மனவலிமை போன்றவை சாதாரண உழைக்கும் மக்களிடையேதான் இருக்கின்றன. அதனாலேயே மேல்தட்டு சமூகம் அவர்களை எப்போதும் கீழே வைத்துக்கொண்டு ஏய்த்துப் பிழைக்க விரும்புகிறது.
அந்த நாவலின் கடைசி அத்தியாயத்தில் வரும் சைமன் லெக்ரி ஒரு சூழ்நிலையில், டாம் மாமாவைக் கொலை வெறியுடன் தாக்கி உன் உடம்பில் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நான் வழிய விடுவேன் என்பான். உயிர் பிரியும் நிலமைக்குப் போனபோதும் டாம் மாமா சகிப்புத் தன்மையுடன் இயேசு, புத்தர், நபியை, காந்தியை ஞாபகப்படுத்துகிறார்.
ஆபிரகாம் லிங்கன் தோன்றும் வரை அடிமைத்தனம் என்ற இழிவு அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஒரு கறுப்பினத்தவர் இருக்கும் இன்றய சூழலில்கூட ஆப்பிரிக்கர்-அமெரிக்கர்கள், இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர் என்பது வெட்கப்பட வேண்டியதாகும். “மனித மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அந்த விடுதலை உணர்வு, இந்தப் பூவுலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் சமம் என்ற நிலை தோன்றும் வரை, இந்தச் சமூகம் தன்னை நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ள அருகதையற்றது.”
அருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.
- பி.கே.மின்னஞ்சல் வழியாக…