நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு மீண்டும் அனுமதி அளித்து பிரகடனம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ள இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு துடிப்பது சரியில்லை.
நிலங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தொழிற்சாலைகள் மற்றும் வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது நமது கண்ணை நாமே குருடாக்கிக்கொள்வதற்குச் சமம்.
விவசாயிகள் சந்தித்து வரும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேவையற்ற கடுமையை இந்த அவசரச் சட்டத்தில் அரசு காட்டிவருவது மிகவும் வருந்தத்தக்கது!
- ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.