‘வித்தகத் தந்திரங்கள்’ கட்டுரை ஆழமான கருத்துச் செறிவுடன் உள்ளது. மேலும், இன்று அதிகமாக பேசப்படும் கற்றல்திறன் குறைபாட்டுக்கு மூலகாரணமாக இருப்பது வேற்று மொழிக் கல்வியே.
குழந்தை களிடமிருந்து பேச்சையும் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் செயல்பாட்டையும் இதன் மூலம் பிடுங்கி எறிந்துவிட்டு, குறை அவர்களிடம் இருப்பதாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள் குழந்தைகள்.
- செ. ஜெயலெக்ஷ்மி,சென்னை.
***
‘வித்தகத் தந்திரங்கள்' கட்டுரை பல புதிர்களுக்கான விடைகளை மிகவும் அறிவுபூர்வமாக விளக்கியுள்ளது.
தாய்மொழிக் கல்வியின் அவசியம்குறித்து சற்றும் உணராத கல்வியாளர்களின் பொறுப்பற்றதனமும் உள்நோக்கம் கொண்ட வியாபார உத்திகளும் என்றுதான் மாறுமோ? தனியார் மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் கல்வி முறை வந்ததும் தன் கல்வி வியாபாரத்தைக் காப்பாற்ற சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்குத் தாவுவதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.
இது ஒரு மோசமான வியாபார உத்தி. அரசு, தாய் மொழிக் கல்வியைக் காக்க வலிமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்!
- ரமேஷ் குமார், அமராவதி நகர்.