இப்படிக்கு இவர்கள்

முறையான அரசின் கடமை எது?

செய்திப்பிரிவு

எந்த ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் ஆதாரமானது அதன் சுதந்திரத் தன்மை என்ற இன்றைய தலையங்கத்தின் தொடக்க வரிகள் மிகவும் அற்புதம்.

நம் நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மசோதாக்களை நிறைவேற்றுவதும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இல்லாவிடினும் மக்களின் நலனுக்காகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் (ரயில்வே போன்ற) துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்க நினைப்பதும் முரண்பாடுகளின் மொத்த உருவமாக மத்திய அரசு திகழ்கிறது.

மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசென்றால், தான் செய்ய நினைக்கும் காரியத்துக்கான சரியான, மிகவும் ஆழமான வாதங்களை முன்வைத்து, பிறகு மசோதாக்களை நிறைவேற்றுவதுதான் ஒரு முறையான அரசின் கடமை.

அதை விடுத்து, கொண்டுவந்த அனைத்து மசோதாக்களையும் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஒரு சர்வாதிகாரப் போக்குக்கான முன்னோட்டமாகத்தான் தெரிகிறது.

- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT