‘ஆறுதலை மகிழ்ச்சியாகக் கொள்ள முடியுமா?’ தலையங்கம் படித்தேன்.
தலைமைத் தகவல் ஆணையம், தலைமைக் கண்காணிப்பு ஆணையம் இரண்டின் தலைமைப் பொறுப்புக்கும் ஆட்களை நியமிக்க 10 மாதங்களுக்கு மேல் ஆகியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்று கேட்டுள்ளீர்கள்.
மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தலைமைச் செயலக அலுவலர்களுக்கு அவர் சொன்ன அறிவுரை, “நான் பந்தயக் குதிரை வேகத்தில் சென்றால், நீங்கள் குதிரை வேகத்திலாவது என்னைப் பின்தொடர வேண்டும்.
” மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, மிக முக்கியமான இரு துறைகளுக்குத் தலைவரை நியமிக்க 10 மாதங்கள் ஆகியுள்ளன. பாஜக அரசு குதிரை வேகத்தில் அல்ல, ஆமை வேகத்தில்கூடச் செல்லவில்லை.
- ஜி. புருசோத்தமன், திருநெல்வேலி.