கண்ணகி சென்ற வழியில் ஒரு பயணம் - ‘மிளிர் கல்’ நாவலுக்கு கமலாலயன் எழுதிய விமரிசனம் மிக அருமை.
கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கக் கற்கள் கடலில் விளையும் முத்துக் கற்களை விட மதிப்பு மிக்கது. அந்தக் கற்கள் காங்கேயம் நாட்டில் கிடைத்தவை.
ரோமாபுரிப் பெண்கள் காங்கேயம் நாட்டு மாணிக்கக் கற்கள் மீது பேராசை கொண்டிருந்தார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
2000 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க மணிகளைப் பட்டைதீட்டி ஏற்றுமதி செய்யும் தொழில்நகரமாகக் காங்கேயம் நாட்டில் இருந்த கொடுமணல் புகழ்பெற்று விளங்கியது.
இன்றும் காங்கேயம் பகுதியில் ஆசாரிகள் என்ற தொழிற்பிரிவினர் சுமார் 100 குடும்பத்தினர் மாணிக்கக் கற்களைப் பட்டைதீட்டும் தொழிலைக் குடும்பத் தொழிலாக செய்துவருகின்றனர். அவர்களின் நிலையோ படுபாதாளத்தில் உள்ளது.
ஆனால், இதில் இடைத்தரகர்களும் பன்னாட்டு வியாபாரிகளும் கொள்ளை லாபம் அடைந்துவருகின்றனர். அரசே இதைக் கொள்முதல் செய்து, சந்தைப்படுத்த வேண்டும்.
- சு. மூர்த்தி, ஆசிரியர், காங்கேயம்.