இப்படிக்கு இவர்கள்

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

செய்திப்பிரிவு

பொன்னேரிக்கு நீர் வர ஒரே வழி, கொள்ளிடத்திலிருந்து தடுப்பணை கட்டி நீர் வரத்து உருவாக்குவதுதான். இன்றைய நிலையில், பொன்னேரி மட்டுமல்ல எந்த ஒரு ஏரியையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாமே ஒன்றிணைந்து தூர் வாரி கரை கட்ட வேண்டும். இல்லையென்றால், போராடி அரசைச் செய்ய வைக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிமென்ட் தொழிற்சாலை களிடமிருந்தும் தூர் வாரி கரை கட்டும் கனரக இயந்திரங்களை உதவிக்குப் பெறலாம். மேலும், அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங் களை ஒன்றிணைத்து தேவையான கனரக வாகனங்களையும் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் தேவையான ஆட்களையும் பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ளலாம்!

- பே.வே. நந்தா,ஜெயங்கொண்டம்.

***

தலைகுனிய வேண்டுமா நாம்?

மண்ணாகிப்போன பொன்னேரி என்ற கட்டுரையைப் படித்தேன்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையிலும், நம்மால் இதுபோன்ற நீர் ஆதாரக் கட்டுமானங்களை மேலும் உருவாக்க இயலாவிடினும், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற இந்த நீர் ஆதாரக் கட்டுமானங்களை நாம் சரிவரப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், நாம் நமது எதிர்காலச் சந்ததியினரிடம் வெட்கித் தலைகுனிய நேரிடும்.

- ஸ்ரீநிவாசன்தி இந்து’ இணையத்தில்…

SCROLL FOR NEXT