ஒரு பள்ளிக்குப் பெருமை சேர்ப்பவர்கள் முதல்வரும் ஆசிரியர்களும். அவர்கள் பணியாற்றிட உதவ வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.
பெரும்பாலான மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகளைத் தெரியாது. அவர்கள் அன்றாடம் பேசிப் பழகுவது ஆசிரியர்களுடன்தான். இதனை அறிந்தும் ஏற்றும் செயல்படும் பள்ளி என்றும் தலைசிறந்து விளங்கும்.
நான்தானே ஊதியம் வழங்குகிறேன் என்று ஆசிரியர்களைக் கொத்தடிமையாக நடத்தும் பள்ளி சிறப்புமிக்கதாக விளங்காது.
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.