இப்படிக்கு இவர்கள்

தன்னைத் தேடும் பெண்

செய்திப்பிரிவு

ஆணுக்கும் தனித்துவம் உண்டு. பெண்ணுக்கும் தனித்துவம் உண்டு.

ஆனால் திருமணத்துக்குப் பின் ஒரு பெண் பெரும்பாலும் அவளாகவே இருப்பது இன்றளவும் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

உச்சக்கட்ட சோகம் என்னவென்றால் பெரும்பாலான பெண்கள் தாங்கள் தொலைந்து போனதுகூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

‘பெண் இன்று’ பகுதியில் வெளியான 'நம்மை எங்கே தொலைத்தோம்?’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்பனா தேவி போல தன்னைத் தேடும் பெண்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பது மனதுக்குச் சற்று ஆறுதலான விஷயம்.

-ஜே. லூர்து, மதுரை.

SCROLL FOR NEXT