‘திருப்பதி என்கவுன்டர்குறித்த வழக்கின் விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்' என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
கால உச்சவரம்பு இல்லையென்றால், குஜராத்தில் சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கு, உ.பி. ஹாஷிம்புராவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் கிடைத்த நீதியின் கதிதான் இதற்கும் ஏற்படும். விசாரணைக்குக் கால உச்சவரம்பு நிர்ணயித்ததுபோல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், வழக்கை வாதாடித் தீர்ப்பு வழங்கவும் கால நிர்ணயம் வேண்டும். ஏனெனில், தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்!
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.