ராணிப்பேட்டை ரங்கன் எழுதிய ‘ஆர்.கே நகருக்கு அடித்தது யோகம்' கட்டுரையைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தாலும் நமது ஜனநாயகமும் தேர்தல் முறையும் இப்படிக் கேலிக்கூத்தாகிவிட்டதே என்றுதான் நினைக்கத் தோன்றியது.
இடைத்தேர்தல் முடிவுகள் நிச்சயமாக இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்த பின்னரும், ஆளும் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதும், ஆளும் கட்சியும் கோடிக் கணக்கான பணத்தை வாரி இறைத்து வெற்றி அடைவதும், அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் டேரா அடிப்பதோடல்லாமல், அனைத்து அதிகாரிகளையும் களத்தில் இறக்கி, அரசு இயந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தி, தேர்தல் முடியும் வரை அரசை முடக்குவது தேவையா என்பதைத் தேர்தல் ஆணையமும் மக்களும் யோசிக்க வேண்டும்!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.