பணியாற்றும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
பணி செய்யும் இடங்களில் மட்டுமல்ல சமுகத்தில் பல்வேறு தளங்களில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடந்துவருகின்றன. வரதட்சணைக் கொலைகள், கவுரவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என்று பல்வேறு வகையில் வன்முறையைச் சந்திக்கிறார்கள் பெண்கள்.
திருமண வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் தாங்களின் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை கொடுக்க வேண்டும்.
மணவிலக்கு உரிமை, பெண்களுக்கு - குறிப்பாக விதவைகளுக்கு, மறுமணம் செய்துகொள்ளும் உரிமை, பெண்கள் கல்வி கற்கும் உரிமை ஆகியவை அளிக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோருக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
- மா. சேரலாதன், தர்மபுரி.