ஷன்பாக்கை ஓராண்டல்ல, ஈராண்டல்ல… 42 ஆண்டுகள் பாசத்தோடும், பரிவோடும் கவனித்துக்கொண்ட மும்பை கே.இ.எம். மருத்துவமனை செவிலியர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள்.
தங்கள் ஊதிய உயர்வுக்காக மட்டுமே போராடும் ஊழியர்களுக்கு மத்தியில், ஷன்பாக்கை, மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப் பார்த்த உள்ளாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது இதுவரை கண்டிராதது, கேட்டிராதது; அது நம்மை மெய்சிலிர்க்க வைத்தது!
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.