மோடியும் அவரது சக்கர வியூகமும் கட்டுரை படித்ததில் முதலிரண்டு வட்டங்களைத் தாண்டிய மோடியின் ஆட்சி ஜாலம் மூன்றாவது வட்டத்தில் அதன் பளபளப்பை இழந்து நிற்பது தெரிகிறது.
மேலும், நான்காவது வட்டத்தில் அடிக்கடி அவசரச் சட்டங்களில் தஞ்சம் அடைவதால் சாதனைகள் புரிந்தது கொஞ்சம்தான் என்பதும் அதன் வேகமும் நத்தைதான் என்பதும் தெளிவாகிறது. ஐந்தாவது வட்டத்தில் மோடி தோற்க ஆரம்பித்திருக்கிறார் என்பதும் உண்மை.
மதமாற்ற நோக்கங்களையும் அதுதொடர்பான சிறுபான்மையினரைக் கோபப்படுத்தும் பேச்சுகளையும் மோடி தடுத்துநிறுத்தாவிட்டால், ஐந்தாவது வட்டத்திலேயே மோடி தடுத்து நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம். அடுத்துவருவது உண்மையிலேயே மிகச் சிரமமான ஆறாவது வட்டம்.
இந்திய சமூகத்துக்கு மதஒற்றுமையையும் உண்மையான மதச்சார்பின்மையையும் மோடி நடைமுறைப்படுத்தினால் அனைத்து சக்கர வியூகங்களையும் தாண்டி, மோடி அமோக வெற்றிபெற வாய்ப்பு உண்டு.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.