இப்படிக்கு இவர்கள்

அடுத்த தலைமுறையினருக்காக...

செய்திப்பிரிவு

‘சொல்லத் தோணுது’ பகுதியில் ‘அசோகர் மீண்டும் பிறப்பாரா?’ எனும் தலைப்பிலான கட்டுரையில் தங்கர்பச்சான் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானவை.

அசோகச் சக்கரவர்த்தி தொடங்கி எத்தனையோ ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

இவற்றைப் பராமரிப்பது மிக முக்கியமானது. புதிதாகத் திட்டங்களை நிறைவேற்ற முடிகிறதோ இல்லையோ, ஏற்கனவே இருக்கும் திட்டங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நமது பொறுப்பு.

மத்திய, மாநில அரசுகள் இதை உணர்ந்து நடந்துகொண்டால், வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாகவே செயல்படுத்தப்படும்.

- கூத்தப்பாடி கோவிந்தசாமி,தருமபுரி.

SCROLL FOR NEXT