தங்க.ஜெயராமன் எழுதிய ‘ஆங்கிலமும் நம் கல்வி முறையும்' கட்டுரை, அயல் மொழியான ஆங்கிலத்தைக் கற்பிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் உள்ள இடர்ப்பாடுகளைக் களைய வழி சொன்னது.
முதலில் ஆறாம் வகுப்பிலும் பின்பு மூன்றாம் வகுப்பிலும் தொடங்கிய ஆங்கிலம், தற்போது முதலாம் வகுப்பில் தொடங்கினாலும் மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பதற்குக் காரணம், புரியாமல் மனனம் செய்யும் நமது கல்வி முறையே. தற்போது நடைமுறையில் உள்ள செயல்வழிக் கற்றல் இதனை ஓரளவுக்கு மாற்றிவருகிறது!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
வேம்பார்.