இப்படிக்கு இவர்கள்

மகிழ்ச்சி வியாபாரம்

செய்திப்பிரிவு

மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தன் எண்ணங்களுடன் மூர்க்கத்தனமாகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு உள்ளத்தின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது ‘மகிழ்ச்சி விற்பனையின் காலம் இது!' கட்டுரை.

எல்லா உணர்ச்சிகளும் கலந்த கலவைதான் என்பதை மனிதனே மறந்துவிட்டு மகிழ்ச்சியை மட்டும் தேடி ஓடும் நிலையையும், இந்தத் தேடலையே வியாபாரமாக்கி வணிகர்கள் காசு பார்க்கிறார்கள் என்ற அவலமும் பொட்டிலடித்தாற்போல் உள்ளது.

இவ்வுலகில் எதுவும் சாஸ்வதமில்லை. நிலையாமை ஒன்றே நிலையான இவ்வுலகில் எந்த உணர்ச்சியும் முழுமையானதில்லை என்றே தோன்றுகிறது.

மகிழ்ச்சியுடன் சில சமயங்களில் அயர்ச்சியும், சோகத்தில்கூடச் சில சமயங்களில் சுகமும் சேர்ந்திருப்பதாகவே தெரிகிறது.

வயோதிகத்தில் நோயும் தனிமையும் உயிரற்ற நிழல்களாகக் கூடவே வரும்போது இக்கட்டுரையில் அலையடிக்கிற எண்ணங்கள்தான் எல்லோரது மனதிலும் எழும்.

- ஜே. லூர்து,மதுரை.

SCROLL FOR NEXT