இப்படிக்கு இவர்கள்

எட்டாக்கனி

செய்திப்பிரிவு

இளஞ்சிறார்கள் ஏன் தவறான முறையில் குற்றவாளிகளாக உருவாகிறார்கள் என்பதை ‘தேவை சீர்திருத்தமே, சிறையல்ல!’ கட்டுரை உணர்த்தியது.

தற்போதைய கல்விமுறை கூட மனிதனை மனிதனாக்கும் விதத்தில் அமையவில்லை. மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இருக்கின்றன.

நீதிபோதனை, உடற்கல்வி போன்றவை தற்போது கல்விக் குழுமங்களில் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறிதான்.

மேலும், அக்காலத்தில் வயதான தாத்தா, பாட்டிகள் நீதி போதனைக் கதைகளைக் கூறிவந்தார்கள். இப்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் பெற்றோர் அன்பு என்பது இக்கால சிறுவர், சிறுமிகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது!

- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

SCROLL FOR NEXT