இப்படிக்கு இவர்கள்

ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்

செய்திப்பிரிவு

‘என் கல்வி… என் உரிமை!’ தொடர் மிகஅருமை.

உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆங்கில தினசரிகளில் மட்டுமே சாத்தியமாயிருந்த, ஒரு பிரச்சினை குறித்த தொடரைத் தமிழில் கொண்டுவர இயலும் என நிரூபித்ததற்கு நன்றி.


அதுவும் காலத்தோடு. நீரின் இன்றியமையாமை, நிலச் சட்டம் தொடர்பான நிலம்குறித்த கட்டுரை என்று தொடங்கி தற்போது ‘என் கல்வி… என் உரிமை!’ வரை தொடர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தேவையையும், அவை மட்டுமே சாத்தியமாக்கும் திறன் வளர்த்தல், கற்றல் இனிமை, சாதித் தகர்ப்பு என எல்லாவற்றையும் கட்டுரையாக்கிக் கொண்டுவந்தது மிகவும் பயனுள்ளது.

வேகமாய் மூடப்பட்டுவரும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளைக் காப்பற்றத் துடிக்கும் இந்தியாவின் பல்வேறு சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் உதவியாக வந்திருக்கின்றன இந்தத் தொடர் கட்டுரைகள்.

மாணவர் தற்கொலைகளைத் தடுக்கத் தேவையான தனித்திறன் வளர்த்தல், மாணவர்கள் போட்டிக் குதிரைகளாகவும், பள்ளிக்கூடங்கள் பந்தய மைதானங்களாகவும் மாறும் அவலத்தைத் தடுக்கத் தேவையான கற்றலில் இனிமை கொண்ட அரசுப் பள்ளிகளே இனி இந்த தமிழ்ச் சமூகத்துக்குத் தேவை என்பதை ஆணித்தரமாகச் சொன்ன கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்.

உங்களின் இந்த மகத்தான சமூகப் பணிக்கு நாங்கள் எப்போதும் துணை இருப்போம்!

- சீ.நா. இராம்கோபால்,புதுச்சேரி.

SCROLL FOR NEXT