இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்டு வீடு திரும்பியவர்களில் சிலரே முதுமையடைந்து (90 வயதுக்கு மேல்) ஆதரவற்ற நிலையில் வாழ்ந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் நினைவு தினத்தை அனுசரிக்க ரஷ்யா சென்று திரும்பியுள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, போரில் பங்கு கொண்டவர்களைப் பாராட்டுவதோடு அல்லாமல் அவர்களுக்கு ஓய்வு ஊதியத் திட்டத்தை அறிவித்தால் அதுவே அவர்களுக்கு முதுமையில் உண்மையான பாராட்டாக அமையும்.
- இரா. ஜகன்நாதன் (95 வயது) AAA L/NK 25038, ஸ்ரீவில்லிபுத்தூர்.