இப்படிக்கு இவர்கள்

சிக்கலான விஷயத்தில் துணிச்சலான அறிவிப்பு

செய்திப்பிரிவு

தனது மகன் தன்பாலின உறவாளர் என்று தெரிந்த பின்னர் அவரைப் புரிந்துகொண்டு ஒரு ஆணையே அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்திருக்கும் மும்பை பெண்மணியின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

இது சரியா தவறா என்று வெளியில் இருந்து கருத்து சொல்பவர்களுக்கு வேண்டுமானால் இது விவாதப் பொருளாக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற சிக்கலான விஷயங்களில் பெரிய மனதுடன் முடிவெடுத்தாலே பிரச்சினைகளைத் தவிர்த்துவிட முடியும் என்பதற்கு இந்தப் பெண் ஒரு உதாரணம்.

- சரவணக்குமார்,சென்னை.

SCROLL FOR NEXT