ஆரம்பக் கல்வி வரை மட்டுமே பயின்று, தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளைச் சுயமாகக் கற்றுத் தேர்ந்து, பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள ராகுல்ஜியைப் பற்றி நினைக்கும்போது புல்லரிக்கிறது.
கிணற்றுத் தவளையாக இருக்காமல் 45 ஆண்டுகள் இந்தியா உட்பட பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், ‘ஊர்சுற்றிப் புராணம்’ நூலையும் படைக்க உதவிகரமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முறைப்படி கல்வி கற்காவிட்டாலும் அவரது புலமையைக் கண்ட லெனின்கிரேடு பல்கலைக்கழகம், அவரைப் பேராசிரியராக நியமித்துக் கவுரவப்படுத்தியது.
திபெத் பயணத்தின்போது நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்த அரிய புத்தகங்களை மீட்டு வந்தார். மீட்டுவந்த புத்தகங்களுக்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி, விரைவில் அதை டிஜிட்டல்மயமாக்க உள்ளது பாட்னா அருங்காட்சியகம்.
சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கிய மத்திய அரசு, இந்தி மொழியில் சிறந்த படைப்புகளுக்கு இவரது பெயரில் விருது வழங்குகிறது.
- ரெங்கராஜன் கிருஷ்ணமூர்த்தி,திருநெல்வேலி.