இப்படிக்கு இவர்கள்

அடையாளங்களும் அத்துமீறல்களும்

செய்திப்பிரிவு

சென்னை மயிலாப்பூரில் இரண்டு முதியவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் அணிந்திருந்த பூணூல் அறுக்கப்பட்ட சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை.

பெரியாரின் போதனைகளை சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல், ஏதோ உலக மகாப் புரட்சியில் ஈடுபடுவதுபோல் எண்ணிக்கொண்டு இதுபோன்ற காரியங்களைச் சிலர் செய்கிறார்கள்.

இவர்களை வழிநடத்துபவர்களும் சொந்த ஆதாயங்களுக்காகவே இவ்வாறு செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. யாருடைய சாதி, மத அடையாளங்களையும் வலுக்கட்டாயமாகப் பறிப்பது அறிவுடமை அல்ல. இப்படிச் செய்வதால் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

மாறாக, அனைத்து தரப்பினரிடமும் அன்பை விதைப்பதுதான் இன்றைய முக்கியத் தேவை.

- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT