ஏப்ரல் 3 ‘பூச்செண்டு’ பக்கத்தில் ராணுவ அதிகாரி சாம் மானெக் ஷாவைப் பற்றிப் படித்தேன்.
ராணுவ அதிகாரி என்றால் எதிரிகளிடம் கடுகடுத்த முகத்துடன் இருப்பார்கள் என்ற எண்ணத்துக்கு மாறாக அவர் அன்போடு நடந்துகொண்டார்.
கூர்காக்கள் அவரைப் பாசமாக ‘சாம் பகதூர்’ என்றே அழைத்தார்கள். ஒருமுறை அவர், தன் கீழ் பணிபுரிந்த, ஊழல் செய்த ராணுவ வீரரைக் கூப்பிட்டு ‘ஒன்று நீ ராஜினாமா செய்துவிடு; அல்லது இதோ துப்பாக்கி, நீயே உன்னைச் சுட்டுக்கொள், என்று சொன்னார்.
அவரைப் போல் நீதி நேர்மையுடனும் நியாயமாகவும் நடந்துகொண்ட ராணுவ அதிகாரி கிடைப்பது அரிது. அந்த மாமனிதருக்கு ஒரு ராயல் சல்யூட்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.