இப்படிக்கு இவர்கள்

குப்பை பிரச்சினை

செய்திப்பிரிவு

குப்பைத்தொட்டியா விண்வெளி? கருத்துப் பேழைக் கட்டுரை நிறைய கேள்விகளை மனதுக்குள் எழுப்பியுள்ளது. விண்வெளியில் உலக நாடுகளால் உருவாகும் குப்பைகளை என்ன செய்யப்போகிறோம் என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகிறது.

என்னதான் சர்வதேசத் தொலைத்தொடர்பு மையம் இதற்கெனக் கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்திருந்தாலும், கண்காணிக்கக்கூடிய இடத்திலேயே நம்மால் குப்பைகளை முறையாகப் பராமரிக்க இயலாதபோது, விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை முறைப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே தோன்றுகிறது.

உலக நாடுகள் ஒன்று சேர்ந்து விண்கலன்கள் அனுப்புவதால் சேர்ந்துவரும் விண்வெளிக் குப்பைகளால், நாளை விண்வெளியில் பல மோசமான விளைவுகள் ஏற்படும்போது நம்மால் என்ன செய்ய முடியும்?

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT