கர்நாடகத் தலைமை நீதிபதி வகேலா பணியிட மாற்றம் தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன.
வகேலா மீது கீறல் விழுந்திருக்குமோ என்று நினைக்கும் வகையில், இப்படியும் சில சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹவை அவர் நியமித்தது, அவருக்கு ஆலோசனை வழங்கியது (குன்ஹா தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தலைமை நீதிபதி என்ற முறையில் வழங்கப்போகும் தீர்ப்பை நீதிபதி வகேலாவுக்குத் தெரிவித்திருப்பார்), “நீதிபதி மஞ்சுநாத் பவானி சிங் நியமனத்தில் சரியான வரைமுறைகளைப் பின்பற்றவில்லை” என மஞ்சுநாத்தைக் கண்டித்தது, விடுமுறை தினமான ஜனவரி 1-ம் தேதி குமாரசாமியை நியமித்தது, முக்கியமாக பவானி சிங் நியமனம் செல்லாது என்ற அன்பழகனின் மனுவை ஏற்றது, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை மற்ற கர்நாடக நீதிபதிகள் தொடர்ந்து நிராகரித்தது ஆகியவற்றின் பின்னணியில் ஏதாவது இருக்குமோ? எல்லாம் படைத்தவனுக்கே வெளிச்சம்!
- கண்ணன் ஸ்ரீனிவாசலு,இணையதளத்தில்...