இப்படிக்கு இவர்கள்

இந்திய மக்களின் குரல்

செய்திப்பிரிவு

ஏப்ரல் 1, அன்று வெளியான ‘அவர்களே தீர்மானிப்பார்கள்’ தலையங்கம் மிக அருமை.

சராசரி இந்திய மக்களின் குரலாக அது எதிரொலித்தது. கேஸ் மானியம்பற்றிய தங்களின் நிலையே ஒட்டுமொத்த இந்தியர்களின் நிலை.

நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள்பற்றிய விவரங்கள்-நாட்டின் நலன் கருதிய தங்களின் ஜனநாயக கடமைக்கு மிகவும் நன்றி. அரசு நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும், தீங்கு செய்யும்போது சுட்டிக்காட்ட வேண்டும்.

அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள். மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது.

- எம். செய்யது அகமது,காரைக்கால்.

SCROLL FOR NEXT