‘ராகுலின் மறுவருகை’ தலையங்கம் படித்தேன். 2014-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்று புதிய மக்களவை அமைக்கப்பட்டது.
ஓராண்டுக் காலம் மக்களவை விவாதங்களில் பங்கேற்காமல், திடிரென நிலம் கையகப்படுத்தும் மசோதா விவாதத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இதில் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார். சிறிதும் பொருந்தாத வகையில் ‘சூட்-பூட்’ அரசு என்று பேசியுள்ளார். ஒருவர் சூட் அணிவதும் அல்லது வேட்டி அணிவதும் அவரவருடைய தனிப்பட்ட சுதந்திரம். தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவானேன்?
- ஜி. புருசோத்தமன்,நெல்லை.