உரிய காலத்தில் வெளிவந்துள்ளது ‘வரலாற்று வாய்ப்பு இது... சென்னையில் அல்ல; டெல்லியில் பேசுங்கள்’ கட்டுரை. எனக்கு நிறைய தகவல்களை இக்கட்டுரை தந்திருக்கிறது.
விஷயம், உரியவர்களின் கவனத்துக்குச் சென்று அவர்கள் செயல்பட்டால் உண்மையிலேயே வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தியதற்கான பலன் கிடைக்கும்.
சட்டப்பேரவையில், கடந்த மார்ச் 30 அன்று பேசும்போது இதேபோன்ற கருத்தை முன்வைத்து நான் பேசியிருந்தேன். இந்தக் கட்டுரை முன்கூட்டியே வெளிவந்திருந்தால், எனக்கு மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
- பி.எல். சுந்தரம்,சட்டப்பேரவை உறுப்பினர், பவானிசாகர்.