பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி, தங்கம், வைரம் பதித்த ஆடைகளையும் நகைகளையும் அணிவித்து மிக ஆடம்பரமாக நடைபெற்ற புருனை நாட்டு மன்னர் மகன் திருமணம் ‘இஸ்லாமியப் பாரம்பரிய முறைப்படி’ நடந்ததாகக் சொல்லிக்கொள்கிறார்கள்.
குர்ஆன் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலை கொண்ட இஸ்லாம் இது போன்ற ஆடம்பரத் திருமணங்களை அங்கீகரிக்கவில்லை. எளிமையான திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதை ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகவே பார்க்கிறது.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இருக்க ஒப்பந்தம் செய்ய ஆடம்பரமோ, அனாவசிய செலவோ தேவை இல்லை.
ஆண்கள் தங்கம் அணிவதைக்கூட இஸ்லாம் தடை செய்கிறது. தங்க, வைர நகைகளை அணிந்துகொண்டு ‘இஸ்லாமியப் பாரம்பரிய முறைப்படி’ திருமணம் என்று சொல்லிக்கொள்வது முரண் நகை!
- பா. ராஜா முஹம்மது,திருத்துறைப்பூண்டி.