இப்படிக்கு இவர்கள்

வயலில் தோய்ந்த மக்கள்

செய்திப்பிரிவு

தங்க. ஜெயராமனின் ‘மண்ணைப் பொன்னாக்கிய பண்ணையாட்கள்’ கட்டுரை, பண்ணையாட்களாக உழைப்பைப் பறிகொடுத்தவர்கள் குறித்து விரிவாகவே பேசியது.

நெற்களஞ்சியப் பகுதியைத் தங்கள் உழைப்பால் வளர்த்தவர்கள் பண்ணையாட்கள். ஆனால், அவர்களை அடிமையாகவே பார்த்தது சாதிப் பண்ணைச் சமூகம். அதற்கெதிரான கலகங்களையும் பண்ணையாட்கள் சிறப்புறச் செய்த வரலாறும் உண்டு.

ஆனாலும், சமூகப் படிநிலை அமைப்பும், அரசியலும் ஆண்டைகளின் பக்கமே நின்று பண்ணையாட்களைத் தண்டித்தன. இன்றும்கூட நிலம் பண்ணையாளர்களிடமும் கோயில் மடங்களிடமும்தான் உள்ளது. நீர் மட்டும் எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், நிலம் மட்டும் ஏன் ஒருசிலருக்கே சொத்தாகிறது?

- தி. ஸ்டாலின்,பெ.பொன்னேரி.

SCROLL FOR NEXT