‘ஒரு பிடி மண்' குறுந்தொடர், அனைத்திந்திய அரசியல் கட்சிகளும் விவசாயத்துக்கு எதிராகச் செயல்படும் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது.
உலக நாகரிகமும் அறிவும் ஆற்றுப்படுகையின் விவசாயத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. உண்மையில், நம் ஒவ்வொருவருக்கும் குலத்தொழில் என்பதை இன்றைய உலகம் மறந்துபோனது வேதனைக்குரியது. உழது வாழ்பவனைத்தான் தொழுது வாழ வேண்டும் என்றார் வள்ளுவர். நாட்டுப்படலம் பாடும் முன் ஆற்றுப்படலம் பாடினான் கம்பன்.
போற்றுதற்குரிய அந்த விவசாயத்தை விட்டுவிட்டு சித்தாளாகவும், திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளராகவும் போகும் உண்மையைத் தெளிவாக்கியுள்ளது இந்தத் தொடர்.
விளைநிலமெல்லாம் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டுச் சோற்றுக்கு எங்கே போவது? என்ற கேள்விக்கும், எதிர்க் கட்சியாக இருந்தபோது எதிர்த்த சட்டத்தை, ஆளும் கட்சியாக மாறிவிட்ட பின் அவசரச் சட்டமாக்கத் துடிப்பது ஏன்?’ எனக் கேட்கும் கட்டுரை ஆசிரியரின் கேள்விகளுக்கு இந்தப் பாவனை அரசியல்வாதிகளின் பதில் என்ன?
- ந. குமார், திருவாரூர்.